Categories
அரசியல் மாநில செய்திகள்

15 நிமிஷத்துல போகலாம்…. ஆனால் 2மணி நேரம் ஆகுது… பார்த்ததும் மெர்சலான ஸ்டாலின் ..!!

அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் பங்கேற்று பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுதற்குப் பிறகு ஒவ்வொரு மாவட்டமாக நான் சென்று கொண்டிருந்தேன், இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் என்று ஒவ்வொரு மண்டலமாக பிரித்துக் கொண்டு, அரசு நிகழ்ச்சி , அதற்குப் பிறகு திறப்பு விழா நிகழ்ச்சி, அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி இப்படி பல நிகழ்ச்சிகளுக்கு நான் சுற்றுப்பயணம் செய்கின்றபோது, காலையில் அரசு நிகழ்ச்சியில், மாலையில் இன்னொரு மாவட்ட அரசு நிகழ்ச்சி, இரண்டு நிகழ்ச்சி தான்.

ஆனால் அந்த 24 மணி நேரமும் நிகழ்ச்சி. அது ஏற்பாடு செய்யாத நிகழ்ச்சி, தானாக வந்த நிகழ்ச்சி, என்னவென்று கேட்டீர்கள் என்றால்,  ஓர் மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்கிறோம் என்றால் 15 நிமிஷம், 30 நிமிஷதில் போய்விடலாம். ஆனால் இப்போது நான் போகிறது 15 நிமிடம் ஆகக்கூடிய இடத்திற்கு போவதற்கு கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஆகுது.

என்ன காரணம் ? போகிற வழி எல்லாம் மக்கள், சாலையில் இருபுறங்களிலும் மாற்றத்திறனாளிகள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என்று இரு பக்கமும் நின்று கொண்டு வரவேற்கின்ற அந்த காட்சி, வரவேற்கின்ற காட்சி மட்டும் அல்ல, வாழ்த்து சொல்கின்ற காட்சி மட்டும் அல்ல,  கோரிக்கை அடங்கிய மனுக்களையும் தருகிறார்கள், நம்பிக்கையோடு தருகிறார்கள். இவர்கள் இடத்தில் இந்த மனுவை கொடுத்தால், நிச்சயம் இதை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை இன்று மக்களிடத்தில் வந்திருக்கிறது என தெரிவித்தார்.

Categories

Tech |