Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களை இழிவுபடுத்துவதை…. எங்களால் அனுமதிக்க முடியாது – அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்…!!

பெண்களை இழிவுபடுத்தி யார் பேசினாலும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சசிகலாவையும், முதல்வரையும் தவறாக பேசியது குறித்து எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சசிகலாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார் பெண்களை இழிவுபடுத்தி யார் பேசினாலும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் சசிகலா விடுதலையால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தேர்தலில் ராயபுரம் தொகுதியில் மு.க ஸ்டாலின் நிற்க வேண்டும் என்பது தனது ஆசை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |