Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கட்சி காரங்களை வெட்டிட்டாங்க; DMKவினர் அடாவடி அதிகமாகிவிட்டது; பொங்கி எழுந்த பாஜக.!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன்,  திமுகவினரின் ரவுடித்தனம் அதிகமாக்கிக் கொண்டு வருவதை நாம் எல்லோருமே நன்றாக தெரிந்து வைத்திருக்கிறோம். அமைச்சர்களே அடாவடித்தனமாக பேசுவது, பொதுமக்களை அடாவடித்தனமாக பேசுவது எல்லாம் வழக்கமாக இருக்கிறது. பல தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள், பிரியாணி கடையிலிருந்து, மேக்கப் செய்கின்ற அம்மா  அலுவலகம் வரைக்கும் எல்லாரையும் அவர்கள் அராஜகப் போக்கில் அவர்கள் மீது தாக்குவது தொடுப்பது,  சட்டத்தை மீறி செயல்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது.

திருக்கழுக்குன்றத்தில் எங்களுடைய கட்சியினுடைய நிர்வாகி துரைதனசேகர் கஞ்சா வியாபாரிகளால் தாக்கப்பட்டார்,  வெட்டப்பட்டார். அதே மாதிரி அமைச்சர்கள் எங்கள் தலைவர் செய்கின்ற செயல்பாடுகளை பார்த்து பொறாமை பிடித்து, அவர் மீது அவதூறாக பேசுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அழுகிய முட்டை என்கின்ற ஒரு பிரச்சாரம் ஓடிக்கொண்டு இருக்கிறது, பத்திரிக்கையில்…  சமூக ஊடகங்களில் போய்க்கொண்டிருக்கிறது.

இது யாருடைய பிரச்சினை என்றால் சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களுடைய துறையில் சப்ளை செய்யப்படுகின்ற சத்துணவிற்கும், பள்ளிக்கூடங்களுக்கும், மதிய உணவிற்கும் சப்ளை செய்கின்ற உணவில்,  அழுகிய முட்டை இருக்கிறது என இந்த பேச்சு தொடங்கியது. இது பிஜேபி மட்டும் சொன்ன குற்றச்சாட்டு அல்ல, எல்லா பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, கடலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஒவ்வொரு பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படுகின்ற முட்டை எல்லாம் அழுகிய முட்டையாக இருக்கிறது என்பது செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Categories

Tech |