Categories
உலக செய்திகள்

நாங்க எதுக்கு தடுப்பூசி போடணும்….?? போப் பிரான்சிஸின் பாதுகாவலர்கள் எடுத்த முடிவு….!!

தடுப்பூசி போட விருப்பம் இல்லாததால் வாட்டிகனில் போப் பிரான்சிஷின் பாதுகாவலராக இருந்த 3 பேர் சுவிட்சர்லாந்துக்கு திரும்பி சென்றுள்ளனர்.

வாட்டிகனில் போப் பிரான்சிஸ் அவர்களுக்கு பாதுகாவலராக பணியில் ஈடுபட்டிருந்த சுவிட்சர்லாந்தை சேர்ந்த மூவர் தடுப்பூசி போடாத காரணத்தினால் அந்நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர். மேலும் வாட்டிகனுக்குள் நுழையும் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் அல்லது தங்களுக்கு கொரோனா இல்லை என பரிசோதனை செய்து நிரூபிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட்டிருந்தது.

 

இந்தநிலையில் சுவிஸ் நாட்டவர்களான இந்த மூன்று பாதுகாவலர்களும் தங்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பமில்லை எனக்கூறி பாதுகாப்பு பணியில் இருந்து தாங்களாகவே விடுவித்துக்கொண்டு சுவிட்சர்லாந்துக்கு சென்றுள்ளனர். மேலும் அந்த மூன்று பேரும் தடுப்பூசி பெற காத்திருக்கும் நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |