தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க கோரி தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்டாலும், பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கான குற்றச்சாட்டாக பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் சுற்றி திரிவது குற்றச்சாட்டாக கூறப்படுகிறது.
எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் முழு ஒத்துழைப்பும், சுயகட்டுப்படும் தேவை என மருத்துவர் குழு ஒருபுறம் பரிந்துரை செய்ய, தமிழகத்தில் ஊராடங்கை நீட்டிக்க கோரி தமிழக முதல்வரிடம் பரிந்துரை செய்யவில்லை என ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னை உள்ளிட்ட பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் பரிசோதனையை அதிகப்படுத்தவும்,
தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ICMR இன் கருத்து படி தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கபடுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும், அதற்கு மாறாக கொரோனாவை கட்டுப்படுத்த வேறு சில நடவடிக்கைகள் கையாளலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.