Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் வைரல்

“எங்க வீட்டுல 5 ஓட்டு” உங்களுக்கு போட மாட்டோம்….. அதிமுக_வினரை கதற விட்ட பெண்… வைரலாகும் வீடியோ….!!

எங்கள் வீட்டில் 5 ஓட்டுக்கள் இருக்கின்றது உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று அதிமுக கட்சியினரை விரட்டிய சம்பவம் வைரலாகி வருகின்றது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை  என 7 கட்டமாக நடைபெறுகின்றது.தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குக்கேட்டு செல்லும் போது பொதுமக்கள் கேள்விகேட்டு வேட்பாளர்களை விரட்டியடிக்கும் சம்பவம் பல்வேறு பகுதியில் அரங்கேறியதை நாம் பார்த்துள்ளோம்.

இந்நிலையில்  காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அதிமுகவினர் சென்ற போது அங்கே இருந்த ஒரு பெண் இப்போது தான் வழி தெரிகின்றதா.? எங்கள் வீட்டில் 5 ஓட்டுக்கள் இருக்கின்றது நாங்கள் உங்களுக்கு போட மாட்டோம். இனிமேல் உங்களுக்கு ஓட்டு போட முடியாது என்று கூறிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |