மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியதில் ரூ 3, 676 கோடியை முறையாக பயன்படுத்தாமல் தமிழகம் திருப்பி அனுப்பியுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகின்றது. குறிப்பாக 2017-2018-ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ஆவாஸ் யோஜனா திட்டம் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் , பெண்கள் முன்னேற்ற திட்டம் , ஊரக வளர்ச்சித் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செய்ய மத்திய அரசு ரூ 5,920 கோடியை ஒதுக்கியுள்ளது.
துறைவாரியாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி மற்றும் செலவு குறித்த அறிக்கை சிஏஜி தாக்கல் செய்தது.அதில் தமிழகம் 2, 243 கோடியை மட்டும் பயன்படுத்திட்டு 3, 676 கோடியை தமிழகம் திரும்ப அனுப்பியுள்ளதாக அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு நிதியை சரியாக பயன்படுத்த திட்டமில்லாமல் காலவிரயம் செய்ததோடு பல்வேறு திட்டங்கள் முழுமையாக முடிக்கப்படாமல் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது என்றும் சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.