Categories
உலக செய்திகள்

முடிவு செய்யல… “ஆனா அவங்கள மாதிரி கம்மியா கேட்க மாட்டோம்”… நிறைய கேட்போம்.. சீனாவை விடாமல் துரத்தும் டிரம்ப்!

கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மற்ற நாடுகளை விட அதிகமாகவே சீனாவிடமிருந்து இழப்பீடு கோர உள்ளோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்

கொரோனா  தொடர்பாக  சீனா செய்த காரியம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. அந்நாட்டிற்கு எதிராக நடத்தப்படும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம்  என ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் அமெரிக்காவில் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுவரை சீனாவின் வூஹான்  நகரிலுள்ள  விலங்குகள்  சந்தையிலிருந்து கொரோனா  தொற்று பரவியதாக கூறப்பட்டு வந்த நிலையில் அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற பாக்ஸ் நியூஸ் சேனல் தொற்று வூஹான் து நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகத்தில் இருந்து கவனக்குறைவினால் வெளிவந்தது என செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் நேற்று ரோஸ் கார்டனில் ட்ரம்ப்   நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது ஜெர்மன் நாடு 13,000 கோடி யூரோக்களை இழப்பீடு கோர தயாராகியுள்ளது. அமெரிக்கா என்ன செய்யப் போகிறது என நிருபர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ட்ரம்ப் நாங்களும் சீனாவிடமிருந்து இழப்பீடு கோர உள்ளோம். ஆனால் ஜெர்மனி போன்று குறைந்த தொகையாக அது இருக்காது. இன்னும் இழப்பீடு தொகை குறித்து முடிவெடுக்கவில்லை. ஆனால் நிச்சயம் அதிகமாக தான் இருக்கும். உலக அளவில் பாருங்கள் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று. மனித இழப்புகள், பொருளாதார இழப்புகள் என அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

இது அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்பட்டதல்ல உலகத்திற்கே ஏற்பட்ட பெரிய பாதிப்பு ஆகும். உலக அளவில் பல நாடுகளுக்கு கொரோனா  பரவியதற்கு சீனா தான் காரணம் என பல வழிகளில் குற்றம் சுமத்த முடியும். இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்பது  உங்களுக்கே தெரிந்து இருக்கும். சீனாவின் செயல்பாடுகள் எதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாய் இல்லை. ஏனென்றால் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய ஆரம்பித்திலேயே  இதனை அவர்களால் தடுத்திருக்க முடியும். உலக அளவில் பரவவிட்டிருக்காமல் தடுத்திருக்கலாம். சீனா தொடக்கத்திலையே எச்சரித்து இருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது” என ட்ரம்ப்  கூறியுள்ளார்

Categories

Tech |