பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காஷ்மீருர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்ட பிரிவை இரத்து செய்த மத்திய அரசு அதை ஜம்மு , லடாக் என இரண்டு யூனியன் பிரதேஷமாக அறிவித்தது. இது குறித்து ராஜலட்சுமி மண்டா குழுவினர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகின்றனர். இந்த பிரசாரக் குழுவினர் நேற்று தமிழக பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்.பிரசாரக் குழுவினரை தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை, மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.பின்னர் செய்தியாளர்களை அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் , நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் நரேந்திரமோடி மக்களுக்காக உழைக்கின்றார். பா.ஜ.க.வின் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கிராமத்தில் இருக்கும் இளைஞர்கள் அதிகமானோர் விருப்பத்துடன் பா.ஜ.க.வில் இணைகின்றனர். எங்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 33 லட்சத்தை தாண்டியுள்ளது.தென் மாவட்டங்களில் அதிகளவில் உறுப்பினராகியுள்ளனர். மிக சவாலான பிரச்சினைகளை கடந்து உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகின்றோம்.ஆனால் எங்களின் உறுப்பினர் சேர்க்கையை சிலர் விமர்சிக்கிறார்கள்.இது கண்டிக்கத்தக்கது.