Categories
Uncategorized மாநில செய்திகள்

மின் பயன்பாட்டை யூனிட்டாக பிரித்துள்ளோம்; மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை – அமைச்சர் தங்கமணி!

மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் மின் கணக்கீடு எடுக்க முடியவில்லை என்ற காரணத்தினால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தை மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கணக்கீடு நடைபெற்று மின் கட்டணம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. அதன்படி அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக அரசின் அறிவிப்பை அப்படியே நம்பிய அப்பாவி பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஷாக் ஏற்பட்டுள்ளது. மின் கட்டணத்தில் வேண்டுமென்றே நடக்கும் பகல் கொள்ளைக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.

நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாத நுகர்வாகப் பிரிக்காமல் கட்டணம் வசூலிப்பது தான் பிரச்சனைக்கு காரணம் என்பது தெரிந்திருந்தும் மின் கட்டண வசூலில் ஈடுபட்டு கெடுபிடி செய்வதை பொறுத்து கொள்ள முடியாது. முந்தைய மாதக் கட்டணங்களை பேரிடர் நிவாரணமாக அறிவித்து, மேலும் ஆறு மாதங்களுக்காவது கட்டணச் சலுகைகளை வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து பதில் அளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, ஊரடங்கால் வீடுகளில் மின்சாரம் பயன்பாடு அதிகரித்துள்ளதால் தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளது. மின் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை என கூறியுள்ளார். 4 மாதத்துக்குரிய மின் பயன்பாட்டை கணக்கிட்டு இரு மாதங்களுக்கு உண்டான யூனிட்டாக பிரித்து அனுப்புகிறோம். இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவல் வெளியிட்டுள்ளார் என விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |