விவசாயிகளை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஊரடங்குக்கு பின்னர் நாம் எதிகொள்ள போகும் பிரச்சனை குறித்து ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ளார். வல்லரசாகும் கனவிலும், பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு தனது சுகாதாரத்தை காக்கும் பொறுப்பில் இவ்வளவு பலவீனமாக இருக்க கூடாது. எல்லைக்கு அப்பால் இருக்கும் ஆபத்தை விட, நாட்டின் உள்ளிருக்கும் ஆபத்துகள் இன்னும் பெரிது. உலக அளவில் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இரண்டாம் நிலையில் இருக்கும் நம் நாடு, ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கும் சீனா செய்வதில் பாதி அளவே செய்கிறதோ என்பது நமது விவசாய வளர்ச்சியின் இடைவெளியை காட்டுகிறது.
தரை தட்டிப் போகும் வளர்ச்சி, விவசாய கடன், நீர் மேலாண்மை, நிலையில்லா விவசாய வருமானம் இவைகள் தான் அடுத்த தலைமுறை விவசாயிகள் விவசாயத்தை அண்டவிடாமல் வெகு தொலைவில் வைத்து விட்டது. புரட்சிக்குப் பின் நமக்கு இப்போது தேவைப்படுவது பசுமை + புரட்சி. அதாவது விவசாயமும், விவசாயம் சார்ந்த அனைத்து துறைகளிலும் தேவைப்படும் புரட்சி. இந்த ஆட்டின் நாட்டில் விவசாயத்துக்கு தேவைப்படும்முதன்மையான விஷயம் வறண்டு போயிருக்கும் கவனிக்கப் படாமல் விட்டிருந்த விவசாய நிலங்களை, விஞ்ஞானத்தின் உதவியுடன் மீண்டும் விளை நிலமாக்குவது.
விவசாயத் துறையில் வேலை செய்பவர்கள் 80 விழுக்காடு பெண்கள். நடவு , அறுவடை காலம் தவிர பிறகாலங்களில் ஏற்படும் வருமான இழப்பை தடுப்பதற்கு தனிப்பட்ட பெண்கள் பொருளாதாரத்தை மட்டுமல்ல வீட்டின் மற்றும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய ஊக்கமளிக்கும். பொருளாதார புரட்சிக்கு விவசாய வளர்ச்சியை விட சிறந்தது எதுவும் கிடையாது. இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் உழைக்கும் மக்களில் 80 விழுக்காடு அமைப்புசாரா தொழிலாளர்கள்.
ஐரோப்பிய யூனியனின் 14%, வடக்கு அமெரிக்காவில் 20 %, கிழக்கு ஆசியாவில் 26%, சீனாவில் 50, 60 விழுக்காடு. அனைத்தையும் பார்க்கும் பொது உலகளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது நாடாக உயர்த்தி இருக்கிறது. இந்த மிகப் பெரும் சக்தியை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம் என்ற வேதனையான விஷயம் உங்களுக்காவது தெளிவாக தெரிகின்றதா ? என்று கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.