Categories
அரசியல்

” நாங்கள் கேட்ட தொகுதியை கொடுத்துள்ளனர் ” கொ.ம.தே.கட்சியின் பொதுச்செயலாளர் கருத்து….!!

பாராளுமன்ற தேர்தலுக்கு கேட்ட தொகுதியை திமுக கொடுத்துள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தானது .இந்நிலையில் எந்தெந்த தொகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றது  என்று  பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்ய  அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கலந்துகொண்டார்.

இந்நிலையில் தொகுதி முடிவு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற பின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி_யின் பொதுச்செயலாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  எந்த தொகுதி குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது . நாங்கள் கேட்ட தொகுதியை கொடுத்திருக் _கின்றார்கள் . எந்த தொகுதி என்பதை கூட்டணியில் இருக்கின்ற  எல்லா கட்சிக்கும் முடிவாகும் போது திராவிட முன்னேற்றக் கழகம் ஒட்டுமொத்தமாக ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என்று தெரிவித்தார்.மேலும் அவர் பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் தொடர்பாக கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

Categories

Tech |