செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் பின்னடைவு ஏற்பட்டதால், எங்களால அம்மாவின் இயக்கத்தை மீட்க முடியல. ஆனால் இதிலிருந்து நாங்க என்னைக்கும் விலக மாட்டோம். நீங்க கூட பலமுறை கேட்டீங்க. நீங்க அதிமுகவுடன் இணைவீங்களா ? அப்படின்னு… அதுக்கு வாய்ப்பே இல்லை. அந்த தவறை நாங்கள் என்றைக்கும் செய்ய மாட்டோம். கூட்டணிக்கு செல்வீர்களா ? என்று கேட்டீங்க…
கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற போது, எங்களுடைய பலமும், எங்களுடைய உயரமும் எங்களுக்கு தெரியும். சில பேரு மாதிரி ஆணவத்தில், அகம்பாவத்தில், பண திமிரில் எங்கள் நடவடிக்கை இருக்காது. நாங்கள் வளர்ந்து வருகின்ற ஒரு இயக்கம். வருங்காலத்தில் அம்மாவுடைய ஆட்சியை தமிழ்நாட்டில் நிச்சயம் ஏற்படுத்தக் கூடிய உறுதியான தொண்டர்களை உடைய இயக்கம். அதை அடையும் வரை நாங்கள் போராடுவோம்.
எங்களுடைய இலக்கே அம்மாவுடைய கட்சியை… புரட்சித்தலைவர் உடைய கட்சியை… கொள்கைகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் நிலைநாட்டுவதற்கு உருவான இயக்கம். எங்கள் இலக்கை அடையும் வரை நாங்கள் ஓயமாட்டோம். அதிமுக கட்சியை ஜனநாயக ரீதியாக நாங்கள் மீட்டெடுப்போம். இதுதான் எங்களுடைய நோக்கம் என தெரிவித்தார்.