இந்திய விமானப்படை வலிமையாக உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதப் பட்டுள்ளார்.
இந்திய விமானப்படையின் சுதேசமயமாக்கல் திட்டங்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா இணைந்து பாதுகாப்பு உபகரணங்களின் சுதேசமயமாக்கல் முயற்சி குறித்த புத்தகத்தை வெளியிட்டனர். இதில் அரசு அதிகாரிகள் , பல்வேறு துறையை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் இதில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில் , இந்திய விமானப்படை தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி மிகவும் வலிமையாக பெற்று உள்ளது. யங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடத்தபட்ட தாக்குதலில் இந்திய ஆயுதப்படை அதன் வலிமையை உணர்த்தி இருக்கிறது. இதை தொடர்ந்து இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா_வும் பேசினார்.