Categories
அரசியல் சற்றுமுன்

எதிரிகள், துரோகிகளை புறமுதுகிட்டு ஓட வைத்துள்ளோம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி …!!

எதிரிகளையும், துரோகிகளையும் புறமுதுகிட்டு ஓட வைக்கும் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளோம்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் 2021 பொருத்தவரை எதிரிகள், துரோகிகள் புறமுதுகிட்டு ஓடுகின்ற வகையில் புதிய புறநானூற்று வரலாற்றை நிச்சயமாக படைத்து, மீண்டும் தமிழ் மண்ணில், தமிழ்நாட்டில் பொன்மனச்செம்மல், சரித்திர நாயகன், வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி…  மக்களின் மனதில் அன்றும், இன்றும், என்றென்றும் நிற்கின்ற மாபெரும் தலைவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம்.

அதே போல உலகம் முழுமையும் இருக்கின்ற, கற்றறிந்தவர்கள், தமிழர்கள் உள்ளங்களில் மறைந்தாலும், இன்றைக்கும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி 2021 நாங்கள் அமைப்போம். எதிரிகளை புறநானூற்று வழியிலே புறமுதுகிட்டு ஓடச் செய்தோம் என்ற வகையிலே இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் மகிழ்ச்சி கொள்ளத்தக்க ஒரு நாளாக அமைந்துள்ளது என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |