ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிபதியிடம் எங்களுக்கு வேற வழியில்லை என்று ப.சிதம்பரம் தரப்பினர் கெஞ்சியுள்ளனர்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முன்னாள் நிதியமைச்சருக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமினை வழங்க மறுத்ததால் , முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சிதம்பரம் சார்பில் கபில் சிபில் கோரிக்கை வைத்தார்.
நீதிபதி ரமணா இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிப்பார் என்று நீதிபதி ரமணா தலைமை நீதிபதிக்கு மாற்றி பரிந்துரைத்தார். ஆனால் அயோத்தி வழக்கின் அரசியல் சாசன அமர்வு விசாரணை நடைபெற்று வருவதால் இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் தெரிவித்திருந்தார்.
ஆனால் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்திற்கு எதிராக தொடர்ந்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் மீண்டும் நீதிபதி ரமணா அமர்வு முன்பு ப.சிதம்பரம் தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது , சிதம்பரம் சார்பில் ஆஜரான கபில் சிபல், எங்களுக்கு வேறு வழியில்லை, உங்களிடமே மீண்டும் வந்துள்ளோம் என்றார் அதற்கு நீதிபதி ரமணா , உங்களது மனுவில் பிழைகள் உள்ளதாக பதிவாளர் கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி ரமணா கூறுகையில் , வழக்கினை பட்டியல் இடாமல் விசாரிக்க முடியாது என்றும் இந்த வழக்கை இன்றே பட்டியலிடுவது தலைமை நீதிபதியின் கையில் உள்ளது என்று தெரிவித்தார். அதற்கு கபில் சிபல் தலைமை நீதிபதியின் அமர்வு 4 மணிக்குதான் முடியும். அதற்குள் நீதிமன்ற நேரம் முடிந்து விடும் என்று தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதி ரமணா இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று தெரிவித்தார். எங்களுக்கு வழியில்லை என்று நீதிபதியிடம் கெஞ்சியும் நீதிபதி விசாரிக்க முடியாது போய்ட்டு வாங்க என்று அனுப்பியுள்ளர்