மத்திய பிரதேச மாநில அரசியல் சூழலுக்கு நாங்கள் காரணமில்லை என்று பாஜகவின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசை முதலமைச்சர் கமல்நாத் வழிநடத்தி வந்தார்.காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சம் புகுந்தனர். இதனால் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் முதல்வராக இருந்த கமல் நாத் பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , பாஜக ஜனநாயகப் படுகொலை செய்துவிட்டது.இங்கே நடப்பது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று தெரிவித்தார்.
இதற்க்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான சிவராஜ் சவுகான் , மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்ப்பதற்கு அவர்களின் உள்கட்சி விவகாரம் தான் காரணம். காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சியிலோ, பாஜக ஆட்சி அமைக்கும் முயற்சியிலோ ஈடுபடவில்லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
காங்கிரஸ் கட்சிக்குள் நம்பிக்கை இல்லாத சூழல் ஏற்பட்டதன் விளைவால் உண்டாகிய உட்கட்சி மோதல் தான் அந்த அரசை கவிழ்ந்தது. இதுபோன்ற நிலை ஏன் ஏற்பட்டது ? என்று காங்கிரஸ் கட்சி தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.