Categories
அரசியல் மாநில செய்திகள்

நல்லா போய்ட்டு இருக்கு…. பேச தான் செய்யல…. களம் இறங்கிய காங்கிரஸ் ..!!

தேர்தலில் எவ்வளவு இடங்களில் நிற்பது என்பதை திமுக  காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 20ம் தேதியில் இருந்தே தேர்தல் பணிகளை காங்கிரஸ் தொடங்கி விட்டது. ஆகஸ்ட் மாதத்தில் கோவை மாவட்டத்தின்  3 சட்டமன்ற தொகுதிகளுக்கு போய்… ஒவ்வொரு நாளும் ஒரு முழு தொகுதி என ஆய்வு செய்து இருக்கிறேன். அக்டோபர் 2 ஆம் தேதியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு செய்ய இருக்கின்றோம். ஒவ்வொரு வாரமும் 3 தொகுதிகள் ஆய்வு செய்வது என்று முடிவு செய்துள்ளோம்.

எங்களுடைய இயக்கத்தினுடைய முன்னோடிகளுக்கும்,  தலைவர்களும் அதேபோன்று பொறுப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. எனவே எங்களுடைய பணியை நாங்கள் ஆரம்பித்து விட்டோம். தேர்தலில் எவ்வளவு இடங்களில் நிற்பது என்பதை இரண்டு கட்சிகளின் தலைமையும், கூட்டணியும் முடிவு செய்யும். இது சம்பந்தமாக நங்கள் இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |