Categories
உலக செய்திகள்

“உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்போம்!”.. அது எங்களின் உரிமை.. தலீபான்கள் அறிவிப்பு..!!

தலிபான்கள், காஷ்மீர் உட்பட உலகில் உள்ள எந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுப்போம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்களின் தோகா அரசியல் அலுவலகத்தின்  செய்தி தொடர்பாளரான, சுகைல் ஷகீன், ஒரு பத்திரிகை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, உலகில் எந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமியர்களுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம் என்று கூறியிருக்கிறார்.

அதாவது, முஸ்லிம் மக்கள் எந்தெந்த நாடுகளில் வசிக்கிறார்களோ, அந்தந்த நாடுகளிடம், இஸ்லாமியர்கள் உங்களின் மக்கள், உங்களின் சொந்த குடிமக்கள். எனவே அவர்களுக்கும், உங்களது சட்டத்தில் சம உரிமை இருக்கிறது என்று வலியுறுத்துவோம். காஷ்மீர் உட்பட எந்த நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்காகவும், இஸ்லாமியர்கள் என்ற முறையில் குரல் கொடுக்க வேண்டியது எங்களின் உரிமை என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |