Categories
மாநில செய்திகள்

“அரசின் புதிய திட்டங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு” – மு.க ஸ்டாலின்

தமிழக அரசின் புதிய திட்டங்களை எப்பொழுதுமே திமுக கட்சி வரவேற்கும் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக சார்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்து கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில் தமிழக அரசு மக்களுக்காக கொண்டுவரும்,புதிய திட்டங்கள், மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு திமுக எப்பொழுதும் எதிராக செயல்படாது. அதேபோல் புதிய தொழிற்சாலைகள், திட்டங்களை திமுக எப்போதுமே வரவேற்கும்.

ஆனால் புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகள் சுற்றுச் சூழலை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது. ஏனென்றால், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை சுற்றுச்சூழலுக்கு எதிராக இருக்கிறது. மேலும் இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை தனியார மயமாக்கலுக்கு வழிவகை செய்கிறது. அதுமட்டுமில்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமான நிலையை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு ஏற்படுத்துகிறது. இதனால் சுற்றுச்சூழலில் பொதுமக்களின் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. இவ்வாறு கருத்தரங்கில் முக ஸ்டாலின் பேசினார்.

Categories

Tech |