Categories
உலக செய்திகள்

நமக்கு இவ்ளோ கடன் இருக்கு…. இதெல்லாம் இப்போ தேவையா? கேள்வி எழுப்பிய அலெக்ஸ் மூனே…!!

அமெரிக்காவின் கடன் சுமை அதிகரித்து கொண்டே இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் அலெக்ஸ் மூனே பேசியுள்ளார்.

உலகெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதன்படி அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை சரி செய்ய பொதுமக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும், பண உதவி செய்வதற்காக 2 டிரில்லியன் டாலர்கள் ஒதுக்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்த நிதி ஒதுக்கீடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற குடியரசுக் கட்சியை சேர்ந்த மேற்கு விர்ஜினியா செனட்டரான அலெக்ஸ் மூனே கூறியதாவது, “தற்போதுள்ள சூழலில் அமெரிக்காவே பெரும் கடன் சுமையில் தான் இருக்கிறது. இந்த நேரத்தில் இச்சிறப்பு திட்டம் தேவைதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏனென்றால் அமெரிக்காவின் கடன் சுமை கடந்த 2020 ஆம் வருடம் 23.4 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில் தற்போது அது 29 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க குடிமக்கள் மீதான கடன் சுமையும் அதிகரித்துள்ளது. இதிலிருந்து பொருளாதாரம் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை நம்மால் உணர முடிகிறது.

இது மட்டுமின்றி பல உலக நாடுகளுக்கு நாம் கடன் பட்டிருக்கிறோம். அந்த வரிசையில், சீனாவிற்கு 1 டிரில்லியன் டாலர்களும், ஜப்பானுக்கு ஒரு டிரில்லியன் டாலர்களும், இந்தியாவிற்கு 216 பில்லியனும், பிரேசிலுக்கு 258 பில்லியன் என்று நாம் கடன் வாங்கிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்த கடன் சுமை இரண்டு மடங்காக அதிகரித்ததற்கு ஒபாமாவின் நிர்வாகம் தான் காரணம். ஆகவே, எதிர்காலத்தில் நாட்டின் கடன் சுமையை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு நிதி வழங்குதல் திட்டத்தை பரிசீலிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். இவரின் இந்த கூற்றை பிரதமர் ஜோ பைடன் ஆலோசிப்பார் என நம்பப்படுகிறது.

Categories

Tech |