ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா என்ற பரபரப்பு தகவல் உலகளவில் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் நீண்டகாலமாக இருந்து வரும் நல்லுறவு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு இந்தியா ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் போட்டது. சுமார் ரூ.37 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தால் எஸ்.400 என்று அழைக்கப்படுகிற அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை 5 என்ற எணிக்கையில் இந்தியாவுக்கு வர இருக்கின்றது. ஆனால் இந்தியா ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்குவது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. அமெரிக்காவிடம் தான் இந்தியா வாங்க வேண்டும் என்று அமெரிக்கா எண்ணுகிறது. இதன் காரணமாக ரஷியாவிடம் இருந்து இந்தியா ஏவுகணை வாங்கினால், இந்தியா மீது பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டியது.
அமெரிக்காவின் மிரட்டலை கண்டுகொள்ளாத ஏவுகணைக்காக முதல்கட்ட தொகையாக ரஷ்யாவுக்கு சுமார் ரூ.6,000 கோடியை கடந்த ஆண்டு வழங்கியது. இது அமெரிக்காவை ஆத்திரத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது. இந்தியாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்க நாட்டின் துணை மந்திரி ஆலிஸ் வெல்ஸ் கூறும் போது, அமெரிக்க ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. அதனை மீறி ரஷியாவிடம் இருந்து போர் தளவாடங்கள் வாங்குகிற நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க இந்த சட்டம் வகை செய்துள்ளது என்று தெரிவித்தார்.
இதனால் இந்தியா ரஷியாவிடம் இருந்து எஸ்.400 அதிநவீன வான்பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கியதால் அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கும் வாய்ப்பு இருக்கின்றது எங்களிடம் சிறப்பான தொழில்நுட்பங்களும், தளவாடங்களும் இருக்கின்றன.ஜனாதிபதி டிரம்ப் இந்தியா சென்ற போது, சுமார் ரூ. 1½ லட்சம் கோடி அளவிற்கு இரு தரப்பு வர்த்தகம் இருக்கின்றது. இந்தியாவுக்கு மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என்று கொள்கையில் மாற்றம் செய்துள்ளோம். அமெரிக்க வான்பாதுகாப்பு ஏவுகணைகள் வாஷிங்டனை மட்டுமல்ல இந்தியாவையும் பாதுகாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.