திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரபல நடிகர் சித்தார்த் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வந்தது. எண்ணிக்கையின் முடிவில் திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சித்தார்த் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது, “ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.
வாழ்த்துக்கள் முக ஸ்டாலின்.எங்கள் அனைவரின் நலனுக்காக நீங்கள் சிறந்த ஆட்சியை கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்.நாங்கள் அனைவரும் உங்களை எதிர்பார்ப்புகளோடும் கேள்விகளோடும் பார்க்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/Actor_Siddharth/status/1388815588944879618