Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பை உன்னிப்பாக கவனிக்கிறோம் – ரிசர்வ் வங்கி ஆளுநர்

கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றேம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ரிசர்வ் வங்கி மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது. கொரோனா எதிரொலியாக பொருளாதார பாதிப்புகளை  மீட்க பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் கருத்துகளை கேட்டு அறிந்துள்ளோம்.

வங்கிகள் வழக்கம்போல் இயங்குவதை ஆர்பிஐ உறுதிசெய்துள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் வங்கிகளும் இயங்குகின்றன.கொரோனாவுக்கு எதிரான போருக்கு ஆர்பிஐ முழுமையாகத் தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஏற்பட்டிருப்பது மிகப்பெரிய பொருளாதார சவால்.

Categories

Tech |