கொரோனா தொற்றுக்கு எதிராக நடந்த போரில் தோற்று விட்டோம் என துருக்கி நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்
துருக்கியில் நடந்த கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் சில இடங்களில் தோற்று விட்டோம். ஆனால் இனிவரும் மாதங்களில் நிச்சயம் மீண்டு வருவோம் என அந்நாட்டின் அதிபர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது தொற்றுக்கு எதிராக நடந்த போரில் நாம் தோற்று விட்டோம் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் இனிவரும் மாதங்களில் முறையாக சமூக இடைவெளியை பின்பற்றி நம் நாட்டிலிருந்து கொரோனா முற்றிலுமாக விலக்குவோம்.
மக்களை பாதுகாத்து வருடத்தில் இரண்டாவது பகுதியில் நம் நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டெடுப்போம்” என கூறியுள்ளார். துருக்கியில் தொற்றை தடுக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. அந்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.