விளையாட்டு என்றாலே அனைவருக்கும் பிடிக்கக் கூடிய ஒரு விஷயம். அதிலும், ஒரு சில விளையாட்டுகள் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும். அந்த வகையில், உலகிலேயே அதிக அளவிலான ரசிகர்கள் கிரிக்கெட், புட்பால் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும், இதையும் தாண்டி WWE என்னும் ரெஸ்லிங் விளையாட்டிருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ரெஸ்லிங் விளையாட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு அறிவித்த பிரபல வீரர் அண்டர்டேக்கர் கடைசியாக 2020 சர்வைவர் சீரிஸில் தோன்றுகிறார். இதில்,
அவருக்கு பெரிய அளவில் பிரிவு உபச்சார விழா திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அண்டர்டேக்கர், “நான் இன்னும் இந்தத் துறையில் எனது 30 ஆண்டு வாழ்க்கையை திரும்பிப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். இனி நான் இதில் இருக்கவே மாட்டேன் என்று இல்லை. ஏனென்றால், இது எப்போதுமே எனக்கான இடமாக இருந்திருக்கிறது என்றார்.” இதைத்தொடர்ந்து தற்போது அவரது ரசிகர்கள் We Miss You அண்டர்டேக்கர் என்ற ஹேஸ்டேக் பதிவிட்டு அவரது நினைவுகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.