இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் மெசேஜ் மற்றும் பதிவுகளை நாங்கள் ஒருநாளும் வேவு பார்க்கவில்லை என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தமே இல்லாத தேவையற்ற தேடப்படாத விளம்பரங்கள் வருவது ஏன்? என தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ ஆடம் மொசெரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சி.இ.ஓ ஆடம், “இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் விளம்பரங்கள் எதேர்ச்சையாகத்தான் வருகின்றன. நீங்கள் தேடாத, ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் குறித்த விளம்பரங்கள் வருவது எதேர்ச்சையானது.
ஃபேஸ்புக் நிறுவனமான இன்ஸ்டா ஒருநாளும் தனது பயனாளர்களின் மெசேஜ்கள் அல்லது இன்ஸ்டா பதிவுகளை நோட்டமிட்டு வேவு பார்த்ததில்லை. அவற்றை வேவு பார்க்கப்போவதும் இல்லை. இன்ஸ்டாகிராம் நிறுவனம் ’deepfakes’ என்றதொரு திட்டக்கொள்கையின் தொடர்பாக பணியாற்றி வருகிறது. மேலும் இதுகுறித்த முழு விவரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.