Categories
தேசிய செய்திகள்

நாங்கள் தருகின்றோம் ”1 KG வெங்காயம் ரூ 15.59” மத்திய அமைச்சர் தகவல்….!!

மத்திய அரசிடம் போதுமான வெங்காயம் இருப்பு இருப்பதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே பெரிதும் சவாலாக இருப்பது வெங்காயம் தான். குறிப்பாக இந்திய உணவு கலாச்சாரத்தின் வெங்காயம் இல்லாமல் சமைக்கக் கூடிய உணவுகள் என்பது மிக மிக குறைவு. எனவே இந்திய மக்களின் உணவில் அதிகப்படியாக வெங்காயம் இருந்து வருகிறது. ஆனால் அதிகப்படியாக பெய்த மழை , குறிப்பிட்ட காலங்களில் விரதம் இருந்து வருவதால் வெங்காயத்தின் தேவை அதிகரித்துள்ளது.இந்த நிலையில் தற்போது வெங்காயத்தின் இருப்பு போதுமானதாக தங்களிடம் இருப்பதாகவும் தேவையான மாநிலங்கள் அதனை பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர்  ராம் விலாஸ் பஸ்வான் கூறியிருக்கிறார்கள்.

அதில் மாநிலங்கள் வெங்காயத்தை வாங்கும் போது ஒரு கிலோவிற்கு 15.59 ரூபாய் என்ற நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். மேலும் ஆந்திரா , திரிபுரா , டெல்லி போன்ற  மாநிலங்களுக்கு கேட்ட அளவு  வெங்காயத்தை வழங்கியுள்ளோம். இது தவிர மற்ற எந்த மாநிலங்கள் வெங்காயம் கேட்டாலும் ஒரு கிலோவிற்கு 15.59 ரூபாய்க்கு வழங்க தயாராக இருக்கின்றோம் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |