சுவிட்சர்லாந்தில், தென்னாப்பிரிக்கா பில்லியரான ஜோஹன் ரூபர்ட் என்பவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த முடியாது என்று மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில், தென்னாப்பிரிக்க பில்லியரான ஜோஹன் ரூபர்ட் என்பவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது. அவருக்கு தடுப்பூசி செலுத்தியது மிகவும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் அவருக்கு இரண்டாவது டோஸ் அளிப்பதை மறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏனென்றால், துர்கா மண்டலத்தில் தற்போது சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் அளிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் பில்லியரான ஜோஹன் ரூபர்ட்க்கு இரண்டாவது டோஸ் வழங்குவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னதாக துர்காவ் மண்டலத்தில் சோதனை முயற்சிக்காக சிலருக்கு சுகாதார மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆனால் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் அவருக்கு எங்கு வழங்கப்படாது என்று துர்காவ் அரசாங்க கவுன்சிலர் உர்ஸ் மார்ட்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பில்லியரான ஜோஹன் ரூபர்ட் தெற்கு மண்டலத்தில் வசித்து, இங்கு வரி செலுத்துபவர் இல்லை. அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்காக தமது தனிப்பட்ட விமானத்தில் பறந்து வந்து போட்டுக் கொண்டார்.
அப்போது சோதனை முயற்சிக்காக அவருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது மண்டலத்தில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஜோஹன் ரூபர்ட்டின் இல்லம் ஜெனீவா அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.