Categories
உலக செய்திகள்

கொரோனாவிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு இல்லை… மருத்துவர்கள் ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை…!!

ரஷ்யாவில் கொரோனாவிடம் பாதுகாப்பு இல்லை என மூன்று மருத்துவர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து குதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உலக நாடுகளில் கொரோனா அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ரஷ்யாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவில் இருக்கும் முன்னணி சுகாதார பணியாளர்கள் மருத்துவமனை ஜன்னலில் இருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து உள்ளனர். இது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது. கீழே விழுந்த சுகாதார பணியாளர்கள் இருவர் மரணமடைந்து விட்டனர்.

ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ரஷ்யாவில் விசாரிக்கப்படும் இந்த மூன்று சம்பவங்கள் ரஷ்ய பத்திரிக்கையில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. கொரோனா  தொற்றின் தாக்கம் ரஷ்யாவில் நாளுக்கு நாள் அதிவேகமாக மாறி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 10581 பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.

மேலும் இன்று ஒருநாள் 76 பேர் உயிரிழந்ததால் மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1356 ஆக உயர்ந்துள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இறப்பு விகிதம் குறைவாகவே இருந்தாலும் ரஷ்யாவில் நிலைமை மிகவும் ஆபத்தாகவே இருப்பதாகவும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும் எச்சரித்து மூன்று மருத்துவர்கள் மருத்துவமனைகளில் இருந்து கீழே குதித்துள்ளனர்.

தென்மேற்கு ரஷ்யாவின் வோரோனேஜ் நகரில் நோவஸ்மான்ஸ்கயா மாவட்ட மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் துறையில் பணியாற்றி வரும் மருத்துவர் அலெக்சாண்டர் ஷுலேபோவ் தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன்னர் சக மருத்துவர் ஒருவருடன் காணொளி மூலமாக தங்களை அதிகமாக வேலை வாங்குவதாகவும், பாதுகாப்பு கருவிகள் இன்றி கொரோனாவினால் பாதித்தவர்களுக்கு  சிகிச்சை கொடுப்பதற்கு கட்டாய படுத்துவதாகவும், தங்களுக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னரும் பணியை தொடர்ந்து செய்ய கட்டாயப்படுத்துவது ஆகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆனால் ஷுலேபோவ் கூறியது உண்மைக்குப் புறம்பானது என கூறி சக மருத்துவரிடம் ரஷ்ய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஷுலேபோவ் தற்கொலைக்கு முயன்றது போன்று இதற்கு முன்னரும் இரண்டு பெண் மருத்துவர்கள் கொரோனா  பாதுகாப்பு எச்சரிக்கை கொடுத்து மருத்துவமனை ஜன்னலிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

Categories

Tech |