Categories
கிரிக்கெட் விளையாட்டு

“IPL Cricket” நடத்த எங்களுக்கு விருப்பம் இல்லை – கிரிக்கெட் வாரியம்

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் கிரிக்கெட்டை நடத்த விரும்புவதாக வெளியான கருத்தை அது மறுத்துள்ளது 

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் காரணமாக காலவரை இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.  தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்  ஐபிஎல் போட்டியை நடத்த விருப்பம் கூறியிருப்பதாக இந்திய கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் கூறியிருக்கின்றார். இதனை அறிந்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இதற்கு மறுப்பு கூறியது.

ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தியாளர் ரிச்சர்ட் பூக் பேட்டி கொடுத்தார். அதில் நியூசிலாந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்த விரும்புவதாக கூறிய தகவல் ஒரு கணிப்புதான். ஐபிஎல் போட்டியை நடத்த எங்களுக்கு விருப்பமில்லை. அதற்காக நாங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் எத்தகைய ஒப்புதலும் நாடவில்லை என்றும் கூறினார்.

Categories

Tech |