Categories
உலக செய்திகள்

“அவர் பேச்சை” நாங்கள் முன்பே கேட்டிருக்க வேண்டும்.! வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட சீனா.!!

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தும் உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ளது. இந்த கொரோனோ வைரஸ் தாக்குதல் காரணமாக உலக அளவில் இதுவரை 10000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அனைவரையும் கதிகலங்கச் செய்துள்ள இந்த கொரோனோ வைரஸ் குறித்து முதன்முறையாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் லீ வென்லியாங் என்பவர் அதே வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார்.

வுகான் நகரில் உள்ள மருத்துவமனையில் லீ வென்லியாங் மருத்துவராக பணியில் இருந்தார். இதனிடையே வுகான் நகரில் உள்ள கடல்வாழ் உயின சந்தையில் இருந்துவந்து லீயிடம் பரிசோதனை மேற்கொண்ட ஏழு பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சார்ஸ் வகை வைரஸ் என கருதிய லீ, தனது பள்ளி நண்பர்கள் இருக்கும் சமூக வலைதள குழு ஒன்றில் இது குறித்து பகிர்ந்துவிட்டு அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுரை கூறி வீடியோவை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து வதந்தியை கிளப்பும்படியான வீடியோவை பதிவிட்டதாக கூறி வுகான் நகர காவல் துறையினர் லீயை எச்சரித்தனர்.

இவருக்கு எதிராக சீன அரசு வழக்கு தொடுத்தது இந்த வைரஸ் குறித்து எதுவும் பேசக்கூடாது யாரிடமும் விவாதிக்க கூடாது சமூக வலைத்தளங்களில் குறிப்பிடக் கூடாது என்று எச்சரித்துள்ளனர்

ஆனால் அதன்பின் அந்த வைரஸ் கொரோனோ வைரஸ் என கண்டறியப்பட்டது. மேலும் அந்த வைரஸின் தாக்குதல் தற்போது வரை தினந்தோறும் உயிரிப்பலியை ஏற்படுத்திவருகிறது.

பின்னர் கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த லீ வென்லியாங், கடந்த ஜனவரி 12ஆம் தேதி அவர் வேலை பார்த்த அதே மருத்துமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி கொரோனோ பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனோ வைரஸ், corona virus, Dr Li Wenliang

இதனிடையே மருத்துவர் லீ வென்லியாங் கொரோனோ பாதிப்பால் பிப்ரவரி 7ஆம் தேதி அதிகாலை 2.58 மணியளவில் உயிழந்துவிட்டதாக அவர் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  தொடர்ந்து லீயின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து பொதுமக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

கொரானா குறித்து முன்பே  கண்டுபிடித்த இவரை சீன அரசு பாராட்டாமல்  முடக்கிய சம்பவம்  அந்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது சீனா காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது; கொரானா வைரஸ் தொடர்பாக அவர் ஏற்கெனவே சொன்னார் ஆனால் நாங்கள் கேட்கவில்லை அவர்கள் அவர் மீது வழக்கு பதிவு செய்தது  தவறு அதை மாற்ற முடியாது. அவர் சொன்னபோது நாங்கள் துரிதமாக செயல்பட்டு இருக்க வேண்டும். உடனே செயல்பட்டிருந்தால் நாங்கள் வைரஸ் பரவலை தடுத்திருக்க முடியும்.

இதனால் பலர் பலியாகி இருக்க மாட்டார்கள் ஆனால் முடியாமல் போய்விட்டது மக்களுக்காக உயிர் துறந்த லீ வென்லியாங்யிடம்  மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். அதே போல அவரின் குடும்பத்தாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். அவருக்கு எதிரான வழக்கை வாபஸ் வாங்குவதாக  என சீன அரசு குறிப்பிட்டுள்ளது.

 

Categories

Tech |