Categories
மாநில செய்திகள்

“நீட் தேர்வை கண்டு இனியும் நாம சும்மா இருக்க கூடாது”… ஆவேசமாக கூறிய பிரபல நடிகர்…!!

நீட் தேர்வை கண்டு இனியும் நாம் அமைதியாக இருக்கக் கூடாது என தமிழக மக்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது தற்கொலையை தூண்டும் தேர்வாக மாற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு இந்த தேர்வை ரத்து செய்ய பலகட்சி அமைப்பினர் மற்றும் நடிகர்கள் அறிவுறுத்தியும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் நேற்று நீட்தேர்வு என்பதும் நடைபெற்று முடிந்தது. இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகர் சூர்யா தன்னுடைய வருத்தத்தையும் தமிழக மக்களுக்கு கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறிய கருத்தில், நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து, குரல் கொடுக்க முன்வர வேண்டும் என, தமிழக மக்களுக்கு அறிவுறுத்தி, நீட் தேர்வு பயம் காரணமாக ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுக்கு, மிகுந்த வேதனை தெரிவித்துள்ள அவர், இது சாதாரண குடும்பங்களின், குழந்தைகளினுடைய மருத்துவர் கனவில், தீ வைக்கும் தேர்வு என கூறினார். மேலும் இந்தத் தேர்வு அநீதியானது என விமர்சித்துள்ள சூர்யா, இது மனு நீதி தேர்வு எனவும்  கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அப்பாவி மாணவர்களின் மரணங்களை இனியும் நாம் அமைதியாக  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது எனவும்  நடிகர் சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |