Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ நம்ம மாட்டிக்க கூடாது… அதிவேகத்தில் சென்ற கார்… விரட்டி பிடித்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தி வந்த காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வரும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ராமேஸ்வரம் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி தீபக்சிவாச் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளனர். ஆனால் வாகனத்தில் இருந்தவர்கள் போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர்.

இதனை பார்த்த காவல்துறையினரும் அந்த காரை பிடிப்பதற்கு வாகனத்தில் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்த காரில் சென்றவர்கள் மரைக்காயர்பட்டினம் அருகே உள்ள கேஸ் குடோன் அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரை சோதனை செய்ததில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது. மேலும் அதனை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |