Categories
அரசியல் மாநில செய்திகள்

3இடத்துல ஆய்வு செய்றோம்…! யாருமே புகார் தரல… சும்மா அடிச்சு விடாதீங்க..! ஆவின் குறித்து நச்சுனு பதில் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவின் 500ml  கிடையாது, ஏறக்குறைய அதனுடைய எடை 517 கிராம் இருக்க வேண்டும். 500 கிராம் வந்து பால் அதோடு சேர்த்து 10ml கொஞ்சம் வரணும் 510. அது இல்லாமல் கூடுதலாக இரண்டில் இருந்து,  மூன்று பால்கவர் 55 மைக்ரான் என்று சொல்வார்கள். அது வந்து  3 கிராம் கூடும். ஆக 517 கிராம் வரைக்கும் இருக்கும். இது மூன்று விதமான ஆய்வுக்குப் பிறகுதான் பால் வெளியே வருகிறது.

முதலில் வந்து உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்த பிறகு தான் வெளியே வருகிறது. அடுத்து வந்து எங்களிடம் இருக்கக்கூடிய குவாலிட்டி கண்ட்ரோல் ஒரு லிட்டர் பாலில் எவ்வளவு புரத சத்து இருக்கிறது, எத்தனை சதவீதம் புரோட்டின் இருக்கும், எத்தனை கலோரி இருக்க வேண்டும். 488 கலோரி இருக்க வேண்டும், அதே மாதிரி பார்த்தால் சர்க்கரை எவ்வளவு இருக்க வேண்டும்..

fat  எவ்வளவு இருக்க வேண்டும் எஸ்.என்.எஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொல்லி படிப்படியாக ஆய்வு செய்து, அதில் ஒரு சதவீதம் குறைந்தாலும் சரி, ஒரு சதவீதம் கூடினாலும் சரி அதை ஆய்வு செய்து பிறகுதான் குவாலிட்டி கண்ட்ரோல் என்று சொல்வார்கள். அதற்கு தனி அதிகாரிகள் உள்ளார்கள், அவர்களுடைய ஆய்வுக்கு பிறகு தான் அது வெளியே வர வேண்டும்.

அடுத்தபடியாக மூன்றாவதாக அங்கு இருக்கக்கூடிய எங்களுடைய பொறியாளர்கள் முழுக்க முழுக்க பாக்கெட்டுகளை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். மிஷின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சரிபாரத்து அதில் 550 கிராம் போகிறதா,  495 கிராம் போகிறதா என்று ஆய்வு செய்து கொண்டு வருவார்கள். கம்மியாக சென்றாலும் பதில் சொல்ல வேண்டும், அதிகமாக போனாலும் நஷ்டம் ஏற்படும், ஆக இரண்டு விதமான சூழ்நிலையும் சரி பார்ப்பதற்காக தனியாக பொறியாளர்கள் வைத்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட மூன்று விதமான ஆய்வுக்கு பிறகு தான் அந்த பால் வெளியே வருகிறது. ஏறக்குறைய தினமும் 65 லட்சம் பாக்கெடுகள் விநியோகிக்கப்படுகிறது ஆவின் பால்…. ஏறக்குறைய ஒரு கோடி நுகர்வோர் எங்களிடம் இருக்கிறார்கள். 65 லட்சம் பாக்கெட் போடுற இடத்தில் யாராவது புகார் கொடுத்துள்ளார்களா ?  கிடையாது. யாருமே புகார் கொடுக்கவில்லை.

ஒரே ஒரு இடத்தில் 430ml  இருக்கு என்று சொல்லி இருக்கிறார்கள். அது கூட யார் கொடுத்திருக்கிறார்கள், அந்த புகார் அளித்தது யார் ? புகார் அளிக்க வேண்டிய இடம் எங்கே ? அதெல்லாம் ஒன்னும் இல்ல… ஏதோ430ml இருக்கு என்று தவறான செய்தியை தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |