அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்ததிட்டமிட்டு இருந்தனர். இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தை நாடிய ஆர்எஸ்எஸ் நிபந்தனையோடு அனுமதி பெற்றது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து உத்தரவிட்டது.
இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட சீமான், மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன்.
மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன்.
(1/3) @CMOTamilnadu @mkstalin
— சீமான் (@SeemanOfficial) September 29, 2022
சரியான நேரத்தில் மிகச்சரியாக முடிவெடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும்,காவல்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்! இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்.
(3/3)
— சீமான் (@SeemanOfficial) September 29, 2022