Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க போனோம்… அவரு கிட்ட பேசுனோம்…. ஆனால் அப்படிலாம் சொல்ல முடியாது….!!

7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்குவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருக்கின்றார். இதனிடையே ஆளுநரிடம் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அதிமுக அமைச்சர்கள் குழு ஆளுநரை சந்தித்தது. ஆளுநரிடம் இதுகுறித்து முறையிட்டம் ஆளுநர் இன்னும் எந்த ஒப்புதலும் வழங்காமல் இருந்ததால் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆளுநருக்கு இது குறித்து கடிதம் எழுதினார்.

ஸ்டாலின் கடிதத்திற்கு ஆளுநர் எழுதிய பதில் கடிதத்தில் 3 அல்லது 4 வாரங்களில் கால அவகாசம் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதை குறிப்பிட்டு மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைச்சர்களிடமும் ஆளுநர் இதைத்தான் சொல்லியுள்ளார். ஆனால் அதிமுக அமைச்சர்கள் இதைப்பற்றி எதுவுமே பேசவில்லை என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு அமைச்சர் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளிக்கையில், ஆளுநரை நாங்கள் சந்தித்தோம். இது தொடர்பாக அழுத்தம் கொடுத்தோம். கால அவகாசம் எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். எவ்வளவு நாள் கால அவகாசம் என்று நாங்கள் கேட்க முடியாது ? உடனே ஒப்புதல் பெற கையெழுத்து போடுங்கள் என்று சொல்ல முடியாது ? அவர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்.

எனவேதான் நாங்கள் சந்திக்கும்போது விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்ற வார்த்தையை பயன் படுத்தினோம். தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவை அவர் மதிப்பார், நிச்சயம் அனுமதி வழங்குவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Categories

Tech |