தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3023ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,460ஆக அதிகரித்துள்ளது.
சென்னை – 203, விழுப்புரம் – 33, கடலூர் – 9, கள்ளக்குறிச்சி – 6, கோவை – 4, மதுரை – 2, அரியலூர் – 2, திருவள்ளூர் -2, தென்காசி – 2, திருவண்ணாமலை – 1, செங்கல்பட்டில் ஒருவருக்கும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 38 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,379 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 1,40,712 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 10,584 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது 1,611 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.