தேனி மாவட்டத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது நடந்த தகராறில் கூலித்தொழிலாளியை அரிவாளால் தாக்கிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் கூலித்தொழிலாளியான நவீன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் நேற்று முன்தினம் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வைத்து அவரது தம்பி வினோத்கண்ணன் மற்றும் அவர்களது நண்பர்களான கெஞ்சையன் குளம் பகுதியை சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் சுதாகர் ஆகியோருடன் பேசி கொண்டிருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிக்கொண்டிருந்ததில் நவீனுக்கும் ஜீப் டிரைவரான சுதாகருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் அவர் வைத்திருந்த அரிவாளால் நவீனை தாக்கியுள்ளார். இந்நிலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கம்பம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் பரிசோதித்து தேனி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் நவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு போலீசார் சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.