Categories
அரசியல்

பாத்தீங்களா ? எவ்ளோ செஞ்சி இருக்கோம்…. பட்டியலிட்டு பேசிய ஈபிஸ் …!!

கடந்த அதிமுக ஆட்சியில் செய்த விஷயங்களை எடப்பாடி பட்டியலிட்டு பேசி வாக்கு சேகரித்தார்.

நம்மை பொருத்தவரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும், அண்ணா திமுக அரசாங்கத்தைப் பொறுத்த வரைக்கும் மக்களுடைய எண்ணங்களை பிரதிபலித்துக் கொண்டே இருந்தது. அது மட்டுமல்ல இந்த விழுப்புரம் மாவட்டம் பின் தங்கிய மாவட்டம் என்ற காரணத்தினாலே இங்கே இருக்கின்ற மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக சட்டக்கல்லூரியை கொண்டு வந்ததும் அம்மாவுடைய அரசு. மரியாதைக்குரிய சிவி சண்முகம் சட்டத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவர் என்னிடம் கோரிக்கை வைத்தார்.

அந்த கோரிக்கையை நாங்கள் நிறைவேற்றி நானே வந்து இந்த சட்டக் கல்லூரியை திறந்து வைத்தேன் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருக்கின்ற காலத்திலே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை இந்த மாவட்டத்திலேயே கொடுத்தோம். கல்வியில் சிறக்க மாண்புமிகு அம்மாவுடைய அரசு ஏராளமான உதவிகளை செய்தது இந்த மாவட்டத்திற்கு  அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு தான். மாணவ சமுதாயத்தை உயர்த்திய அரசு என்பதில் பெருமை உள்ள அரசாங்கம் அம்மாவின் அரசு.

புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற பொழுது இந்த கிராமம் சூழ்ந்த பகுதி. விழுப்புரம் மாவட்டம் பின் தங்கிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் இருக்கின்ற குழந்தைகள் சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்கள் காலணி, சீருடை, விலையில்லா புத்தகம், நோட்டு கொண்டு போவதற்கு பை, பள்ளிக்கு போக சைக்கிள், அறிவுபூர்வமான கல்வி கிடைக்க மடிக்கணினி இவ்வளவு கொடுத்த ஒரே தலைவி புரட்சித்தலைவி அம்மா.

இன்றைக்கு இப்படிப்பட்ட திட்டத்தை கொண்டு வந்ததன் விளைவாக கல்வி கற்க எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது. ஆரம்ப கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நடுநிலைப்பள்ளி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதையெல்லாம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருக்கின்ற பொழுது கொண்டு வந்த திட்டத்தை சிந்தாமல் சிதறாமல் அம்மா மறைவிற்கு பிறகு அப்படியே கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் 68 கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொடுத்திருக்கிறோம், வேளாண் கல்லூரியை கொடுத்திருக்கிறோம், கால்நடை மருத்துவ கல்லூரியை கொடுத்திருக்கிறோம், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரி கொண்டு வந்து சாதனை படைத்திருக்கிறோம், சட்டக்கல்லூரி 7-ஐ கொண்டு வந்திருக்கிறோம். பால்டெக்னிக், ஐ.டி,  இப்படி ஏராளமான கல்லூரியை திறந்ததன் விளைவாக இன்று கிராமத்திலிருந்து நகரம் வரை ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ-மாணவிகள் இன்றைக்கு உயர்கல்வி படிப்பதற்கான எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது.

உயர்கல்வி படிப்போர் அதிகமாக இருக்கிறார்கள் தமிழகத்திலேயே. தேசிய அளவிலே 2030-லே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை இப்பொழுதே அந்த இலக்கை அடைந்துவிட்டோம். 2020-21ல் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 100க்கு 51 பேர் இன்றைக்கு இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பதிலே முதல் மாநிலம் தமிழ்நாடு. 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது 134 பேர் உயர்கல்வி படித்துக் கொண்டிருந்தார்கள் என முன்னாள் முதல்வர் பெருமை கொண்டார்.

Categories

Tech |