பாகிஸ்தானில் நாங்கள் பத்திரமாக உள்ளோம் என்று தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் பாப் டூ பிளஸிஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கராச்சியில் வரும் 26-ஆம் தேதி பாகிஸ் பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இருநாட்டு வீரர்களும் கடுமையாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் சர்வதேச டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளது.
இந்நிலையில், தென்ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் பாப் டூ பிளஸிஸ் பாகிஸ்தானில் நாங்கள் பாதுகாப்புடன் உணர்வதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நாங்கள் கடந்த 13 வருடங்களுக்கு முன் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ளோம். ஆனால் டெஸ்ட் போட்டி இதுவரை விளையாடியதில்லை. அதற்காக நாங்கள் ஆவலுடன் உள்ளோம்.
அப்போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மைதானத்தின் பரப்பு தட்டையாக அமைந்திருந்தது. இப்போது எப்படி உள்ளது என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் நாங்கள் தற்போது பாகிஸ்தானில் உள்ளோம். இங்கு நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உணர்கிறோம். கொரோனா சூழல் ஏற்படுவதால் எங்களால் வெளியில் எங்கேயும் செல்ல முடியவில்லை. வருங்காலங்களில் வரவிருக்கும் அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என நம்புகிறேன் என்று தெரிவித்தார்.