எத்தகைய தடை வந்தாலும் அதிமுக வீறுநடைப் போடும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் மாற்றுக கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு மாற்று கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் பேசிய தமிழக முதலவர் , தாய் கழகத்தில் மீண்டும் தங்களை இணைத்து கொண்டவர்கள், அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும்.எத்தகைய தடை வந்தாலும் அதிமுக வீறுநடைப் போடும் என்று தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி பேசும் போது கொங்கு மண்டலத்தை ஒட்டு மொத்தமாக திரட்டி ஐம்பதாயிரம் பேருடன் விரைவில் திருப்பூரில் மாநாடு நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.