Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவை அனுமதிக்க மாட்டோம்”…. 30 வருஷமா எதிர்க்கும் கோவை காந்தி காலனி மக்கள்…. காரணம் என்ன….?

கோவை மாவட்டத்தில் உள்ள அசோகபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காந்தி காலணி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திமுக, அதிமுக உட்பட 5 கட்சிகளின் கொடிக்கம்பம் இருக்கும் நிலையில், பாஜகவின் கொடிக்கம்பத்தையும் நாட்ட வேண்டும் என்று மாவட்ட பாஜக அறிவுறுத்தியுள்ளது. அதன்படி காந்தி காலனியில் நள்ளிரவு நேரத்தில் பாஜகவின் கொடிக்கம்பம் நாட்டப்பட்ட நிலையில், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு அந்த  கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் மனு எழுதி கையெழுத்து போட்டு அதிகாரிகளிடம் கொடுத்து கொடிக்கம்பத்தை அகற்றுமாறு புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரின் படி சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட கொடிக்கம்பத்தை ஆய்வு செய்து உடனடியாக அங்கிருந்து அகற்றினர். இந்நிலையில் காந்தி காலனியில் பாஜகவின் கொடிக்கம்பத்தை அகற்றியது எதற்காக என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதாவது சுமார் 30 வருடங்களாகவே காந்தி காலனியில் பாஜகவை அனுமதிப்பது கிடையாது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பாக சிலர் பாஜகவில் சேர்ந்தனர். அவர்களால் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் எங்கள் கிராமத்தின் நிம்மதியே போய்விட்டது.

இதனால் அவர்களை நாங்கள் விரட்டி அடிக்கலாம் என்று நினைத்தோம். அதன் பிறகு எங்கள் கிராமத்தில் அமைதி நிலவியது. இதனால்தான் எங்கள் கிராமத்தில் பாஜகவை அனுமதிக்காததோடு, பாஜக கட்சியில் யாரும் சேரக்கூடாது என்று தீர்மானமும் போட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர். மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக மக்களிடையே பாஜகவுக்கு மிகுந்த ஆதரவு பெருகி வருவதாக கூறிவரும் நிலையில், ஒரு கிராமே பாஜகவை முற்றிலும் எதிர்ப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |