Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒண்ணுமே செய்ய மாட்டோம்….. மக்களே தயாரா இருங்க…. மாஜி அமைச்சர் பரபரப்பு பேட்டி ..!!

திமுக அரசின் சார்பில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து முன்னாள் அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக அரசு நேற்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது குறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நகைக்கடன் கூட்டுறவு வங்கியில் வைத்திருந்தாலும், தேசிய வங்கியில் வைத்திருந்தாலும் நாங்கள் தள்ளுபடி செய்வோம். கல்வி கடன் அனைத்துமே ரத்து செய்வோம். பெட்ரோல், டீசல் மீதான  விலை சுமையை, விலை ஏற்றத்தை மக்களுக்கு குறைக்கின்ற வகையில் பெட்ரோலுக்கு 4 ரூபாயும், டீசலுக்கு 5 ரூபாயும் அதேபோன்று முதியவர்களுடைய ஓய்வூதியத் தொகை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாகவும்,

பிரதானமாக ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் குடும்ப கார்டு அடிப்படையில்…. 2 கோடி கார்டுகளுக்கும் மாதம் 1000 ரூபாய் வீதம் தருகிறோம் என்றும், மீனவர்களுக்கு  விசைப்படகு உபயோகிக்கின்ற நிலையில் கட்டு மரத்தில் எஞ்சின் பொருத்தப்பட்ட, வள்ளத்தில் எஞ்சின் பொருத்தப்பட்ட மீன்பிடி சாதனங்ளுக்கு மானியமும், டீசல் மானியமும், மீன்பிடி தடை காலத்தில் ரூ 5 ஆயிரத்திலிருந்து 7 ஆயிரமும், மீன்பிடி குறை காலத்தில் 5 ஆயிரத்தில் இருந்து 7, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் ஸ்கீம் க்கு மாற்றம் செய்யவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள்…  பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் காலத்தில் கொடுத்தார்கள்….

நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் துணை முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர்  ஆகியோர் தெளிவாகவே குறிப்பிட்டார்கள் அந்த வெள்ளை அறிக்கை என்பது ஒரு வெற்று அறிக்கை.  மக்களை தயார் படுத்தும் விதமாக… திமுக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்போவதில்லை….

விலையேற்றம் ஒரு பக்கம் இருக்கும்…. மானியங்களை குறைப்போம்…. மக்களே  அதற்கு தயாராக இருங்கள் என்கின்ற வகையில் அந்த வெள்ளை அறிக்கை சாராம்சம் இருந்தது அதன் தொடர்ச்சியாகத்தான்  வெள்ளை அறிக்கை கொடுத்தாங்க… பட்ஜெட்டிலாவது அறிவிப்பு வருமா என பார்த்தால் ஏமாற்றம் தான்… நாட்டு மக்களுக்கு பெருத்த ஏமாற்றம் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

Categories

Tech |