அமித்ஷாவின் ஹிந்தி குறித்த கருத்தை எதிர்த்து போராடுவோம் , திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில் அரசியல் குறித்து ஏதேனும் கருத்தை தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிந்து வரும் ப.சிதம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்ற கருத்துக்கு எதிராக ட்வீட் பதிவிட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தத்த்து. மேலும் திமுக நாளை மறுநாள் அமித்ஷாவின் கருத்துக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது. இதில் பங்கேற்குமாறும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்_டர் மூலமாக கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் அவர் பதிவிடுள்ள கருத்தில் ,
இந்தி குறித்து அமித்ஷா கூறியதற்கு எதிராக நாளை மறுநாள் திமுக நடத்தும் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க வேண்டும். நாட்டை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்ற கருத்து அபாயகரமானது. தமிழ் மக்கள் மட்டுமல்ல மற்றவருடன் இந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள். அனைத்து மொழிகளின் வளர்ச்சி ஆதரிக்கிறோம் , எந்த மொழியையும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்குவிட மாட்டோம். இந்தி பேசாத மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்த வேண்டும்.இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சு கருத்தை எதிர்த்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.