Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு போலீசையும் விட மாட்டோம்…. பாஜக எடுத்த அதிரடி முடிவு… அண்ணாமலை பரபரப்பு பேச்சு ..!!

கோவையில் திமுக அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சனாதன தர்மத்தின் மீது கையை வைத்திருக்கின்றீர்கள். இதையும் உலகம் முழுவதுமே பட்டி தொட்டி எல்லாம் தமிழர்களுக்கு கொண்டு சேர்த்து, பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி கட்டிலில் அமர வைப்பீர்கள். ஒரு சமுதாயத்திலே மிக முக்கிய துறையாக இருப்பது காவல்துறை. மிக முக்கியம்,  ஏழைகள் – பணக்காரர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் கூட முதலிலே நம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஐயா காப்பாத்துங்க அப்படின்னு ஒரு வார்த்தையை அவர்களுக்கு மட்டும்தான் சொல்லுவோம், வேற யாருக்கும் சொல்ல மாட்டோம்.

கோயம்புத்தூரில் அவர்கள் நடந்து கொண்ட முறை சரியா என்பதை கோயம்புத்தூர் மாநகரத்தில் இருக்கக்கூடிய ஒரு ஒரு காவல்துறை நண்பனும் உணர்ந்து கொள்ள வேண்டும். தடியடிப்பது  பெண் காரிய கருத்தாக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து நியாயமா என உணர வேண்டும். மாவட்டத் தலைவர் பேசிய கருத்துகளுக்காக வன்கொடுமை தடுப்பு சட்டத்தை பாய வைத்தது இதையெல்லாம் இந்தியாவிலே முதல்முறையாக நம்முடைய கோயம்புத்தூர் மாநகர காவல் துறை நண்பர்கள் நீங்கள் காட்டி இருக்கின்றீர்கள்.

நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பிழ் சொல்லியிருந்தோம், மறுபடியும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்பு சொல்வது எனது கடமையாக இருக்கிறது. இரண்டு வருடம் கழித்து எங்களின் மீது எந்த காவல்துறை நண்பர்கள் எல்லாம் கையை வைத்தீர்களோ,  உங்களின் மீது எந்தவிதமான துறை ரீதியான நடவடிக்கை வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல,  ரிடைட்மெண்டாகும் போது உங்களுக்கு பென்ஷன் கிடைக்கவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல,

எங்களின் மீது கையை வைத்தவர்கள் ஒரு ஒரு நாளும் எதற்காக இந்த கண்ணியமான காவல்துறையை ஆடையை அணிந்தேன் என்று நீங்கள் வருத்தப்பட்டீர்கள் என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது. அதே நேரத்துல 99 சதவீத காவல்துறையின் நண்பர்கள் நல்லவர்கள். மனசாட்சிக்கு பயந்தவர்கள். 12,000, 20,000 சம்பளமாக இருந்தால் கூட அதை வைத்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆளுங்கட்சிக்கு சார்பாக நடக்க மாட்டேன். அதற்காக என்னை தூக்கி நீ கன்னியாகுமரியில், தூத்துக்குடியில், திருநெல்வேலியில்,  கோயம்புத்தூரில் இருந்து போட்டாலும் பின்வாங்க மாட்டேன் என்று சொல்லக்கூடிய  நண்பர்களும் இந்த கொங்கு மண்ணிலே தமிழகத்தில் இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |