அமெரிக்கா உடனான மோதலை நாங்கள் ஆரம்பிக்க மாட்டோம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி (Hassan Rouhani), கட்டார் இளவரசர் ஷேக் தமீம்மிடம் (Sheikh Tamim) தொலை பேசியில் உரையாடினார். இருவருக்குமான இந்த உரையாடன் போது, ‘அமெரிக்காவின் செயல்பாடுகளை ஈரான் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், எனினும் அமெரிக்காவுடன் நாங்கள் மோதலை ஆரம்பிக்க மாட்டோம்’ என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக சில நாட்களுக்கு முன்னதாக சர்வதேச விதிகளை மீறும் ஈரானின் போர் கப்பல்களை சுட்டு தள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிரட்டும் விதமாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில் ஈரான் அதிபர் இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.