இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பிளாண்ட் ஏ ட்ரீ கோ என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட பதிவு வைரலாக பரவியதைத் தொடர்ந்து பதிவு நீக்கப்பட்டது.
Plant A Tree Co என்ற அமைப்பானது இன்ஸ்டாகிராமில், நீங்கள் பகிரும் ஒவ்வொரு செல்லப்பிராணிகள் புகைப்படத்திற்கு நாங்கள் ஒரு மரம் நடுவோம் என்று உறுதிக்கூறியது. அவர்கள் இந்த பதிவை வெளியிட்ட, சில நொடிகளில் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் செல்லப்பிராணியின் புகைப்படங்களை பதிவிட தொடங்கினார்கள்.
விரைவில் செல்லப்பிராணிகளின் புகைப்படங்களை வெளியிட்ட நபர்கள், 4 மில்லியன் மரங்கள் எங்கே நட்டுள்ளீர்கள்? என்று கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அப்போது தான் அந்த அமைப்பு சிறிய காலகட்டத்தில் அவ்வளவு அதிக மரங்களை நடக்கூடிய இந்த உறுதிமொழியை தங்களால் நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்துள்ளார்கள்.
எனவே, அடுத்த 10 நிமிடங்களில் அந்த பதிவை நீக்கி, மன்னிப்பு கோரியதோடு அதற்கான விளக்கத்தையும் Plant A Tree Co அமைப்பினர் வெளியிட்டார்கள். அதில், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக வேடிக்கையான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக இந்த பிரச்சாரத்தை ஆரம்பித்தோம்.
ஆனால், குறுகிய காலத்தில் இந்த பதிவு, அதிக பிரபலம் அடையும் என்பதை நாங்கள் அறியவில்லை. எனவே இந்த பதிவை நீக்க தீர்மானித்தோம். இது எங்களின் தவறு விரைவில் இந்த பிரச்சனை எங்களின் கட்டுப்பாட்டை மீறி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.