இலங்கை அதிபர் ராஜினாமா செய்தால் நாங்கள் ஆட்சி ஏற்க தயார் என்று எதிர்க்கட்சி அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்திருக்கிறது. இந்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சே ராஜினாமா செய்யும் பட்சத்தில் நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்க தயாராக இருக்கிறோம் என்று எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
அந்த கட்சியை சேர்ந்த எம்பி ஹர்சன ராஜகருணா தெரிவித்திருப்பதாவது, அதிபர் ராஜினாமா செய்தால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க எங்கள் கட்சி முடிவெடுத்திருக்கிறது. அதிகமான எம்பிக்கள் தற்போது அதிபர் ராஜினாமா செய்தால் மட்டும் தான் நம் கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று முன்மொழிந்ததாக கூறியிருக்கிறார்.