புரட்சித் தலைவர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். சென்னை மெரினாவில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.
அதிமுக அவைதலைவர் தமிழ் மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி முனியசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அதிமுக கொரடா எஸ்பி வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, கே.பி அன்பழகன், செங்கோட்டையன், செம்மலை, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி சம்பத், சேவூர் ராமச்சந்திரன், மோகன், பெஞ்சமின் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் வி.பி ரமணா, டி கே.எம் சின்னையா, சரோஜா, கோகுல இந்திரா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி கருப்பண்ணன், எம்.எஸ்.எம் ஆனந்தன் நாடாளுமன்ற, சட்டமன்ற, உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
அப்போது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவுவிட நினைவு வாயில் பகுதியில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர். குடும்ப ஆட்சி நடத்திவரும் திமுகவை வேரோடும், வேரோடு மண்ணோடும் வீழ்த்தி காட்டுவோம் என உறுதிமொழி ஏற்பு. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வகுத்து தந்த பாதையில் வீழ்நடை போடுவோம் என அதிமுகவினர் உறுதிமொழி. புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாதையில் நடந்து திமுகவை வீழ்த்துவோம் என அதிமுகவினர் உறுதிமொழி. புரட்சித்தலைவர் காட்டிய பாதையில் புரட்சித்தலைவியின் வழிநடந்து நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என உறுதி ஏற்றனர்.